இந்திய அணியுடனான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்திய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்றும் இதனை அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

போடாடியில் பங்கேற்காமல் விலகுவது வெற்றியை எங்களுக்கு தாரை வார்த்ததாக கணக்கிடப்பட்டு இந்த தொடர் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வி இல்லை என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் கோரிக்கை வைத்தது.

பின்னர் இரு அணியினரும் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் இந்ந போட்டி ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்நு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் போடாடியைக் காண டிக்கெட் எடுத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஆனதோடு அவர்களின் ரூ 350 கோடி டிக்கெட் முன்பதிவு பணம் திரும்பக் கிடைக்குமா என்று கேள்விக்குறி எழுந்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.