மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்சும் மோதுகிறது.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்சும், சென்ன சூப்பர் கிங்சும் விளையாடுகின்றன. 2வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.3வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. வரும் 22ம் தேதி சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
2 போட்டிகள் நடக்கும் நாட்களில் முதல் போட்டி 3.30 மணிக்கும், 2வது போட்டி 7.30 மணிக்கும் தொடங்குகிறது. 24 ஆட்டங்கள் துபாயிலும், 20 போட்டிகள் அபுதாபியிலும், 12 ஆட்டங்கள் ஷார்ஜாவிலும் நடக்கின்றன. பிளே ஆப் சுற்றுகள், இறுதி ஆட்டங்கள் எங்கே நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.