டெல்லி:ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீனா நிறுவனமான விகோ, விலகுவதாக அறிவித்து உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்-ன் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த விவோ நிறுவனம், தற்போது இந்தியா சீனா இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, விலகுவதாக அறிவித்து உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, 5 ஆண்டு கால டைட்டில் ஸ்பான்சர் ஷிப்புக்காக ரூ .2,199 கோடியை செலுத்தி ஐபிஎல்நிர்வாகத்துடன் ஒப்பந்தம் போட்டது பிரபல மொபைல் போல் தயாரிப்பு நிறுவனமான விவோ. ஆனால், சமீபத்தில் இந்தியா, சீனா துருப்புகளுக்கு இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதற்கிடை யில் மத்தியஅரசும் சீன செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. சீன நிறுவனங்களுடனான தொடர்புகளை துண்டித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டில் ஐபிஎல் சீசன், கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்த முடியாததால், ஐக்கியஅரபு நாடுகளில் நடத்துவதாக அறிவித்தது. இதனால், சீன நிறுவனமான விவோவின் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டன. விவோ டைட்டில் ஸ்பான்சராக இருப்பது குறித்துப் பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். ஆனால், பிசிசிஐ தரப்பில், ஐபிஎல் 2020 போட்டிக்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து ஸ்பான்சர்களும் தக்கவைக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாக சபை விளக்கம் அளித்தது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்களைத் தொடர்ந்து விவோ ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது. Post navigation மகாத்மா காந்தி உருவப்படத்துடன் நாணயம் வெளியிட பிரிட்டிஷ் அரசு திட்டம்… கொரோனா தொற்று நேரத்திலும் ராஜஸ்தானைப் படுத்தும் அமித்ஷா : சிவசேனா