ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் இடையே இன்று ஜெய்ப்பூ ரில் போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

அதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டையுடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக  ரகானே – ஜோஸ் பட்லர் களமிறங்கினார். ஆனால், வந்த வேகத்திலேயே 5 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் . ரகானே களத்தை விட்டு வெளியேறினார். அதையடுத்து, பட்லர் களமிறங்கினார்.  இவர்  அதிரயாக விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில், பட்லரும், ஸ்மித்தும் தங்களது திறமையை காட்ட தவறினர். அணியின் ஸ்கோர்  77 ரன்னாக இருக்கும் போது பட்லர் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து திரிபாதி களமிறக்கப்பட்டார்.ஆனால்  6 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் வெளியேற, 8.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது ராஜஸ்தான் அணி, தொடர்ந்து நிதானமான ஆட்டத்தின்காரணமாக  15 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் . ஸ்மித் 44 பந்தில் 50 ரன்கள் எடுத்து அரைசதத்தை உறுதி செய்தார்.

அதைத்தொடர்ந்து  4-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர ஆட்டம்  விறுவிறுப்படைந்தது. இருவரும் அதிரடியாக ஆட, கடைசி 4.2 ஓவரில் 34 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ்.

இறுதியில் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்மித் 59 பந்தில் 73 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 14 பந்தில் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து, கொல்கத்தாவுக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.