விசாகப்பட்டினம்:

பிஎல் தொடரின் இறுதிகட்டம் நெருங்கி உள்ள நிலையில், இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது. விசாகப் பட்டினத்தில் உள்ள  ஏ.சி.ஏ.,- வி.டி.சி.ஏ., மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று மீண்டும் விசில் சத்தம் ஒலிக்கும் என்றும் சென்னை ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இன்றைய போட்டியில், சிஎஸ்கே அணி தரப்பில்,வீரர்கள்  ஷேன் வாட்சன், டுபிளசி, சுரேஷ் ரெய்னா, தோனி, அம்பதி ராயுடு, முரளி விஜய், டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், தீபக் சகார் ஆகியோர் களமிறங்குகிறார்கள்.

அதுபோல, டெல்லி கேபிடல்ஸ் அணி தரப்பில் இருந்து, பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கோலின் முன்ரோ, அக்‌ஷர் படேல், ரூதர்போர்டு, கீமோ பாவுல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, டிரெண்ட் பவுல்ட் களமிறங்க உள்ளனர்.

இரு அணிகளும் ஏற்கனவே பலமுறை மோதி உள்ள நிலையில், இன்றைய போட்டி முக்கியத்து வம் வாய்ந்தது. இதில் வெற்றிபெறும் அணியே இறுதிப்போட்டிக்கு நுழையும் தகுதியை பெறும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இரு அணிகளும் ஐபிஎல். கிரிக்கெட் தொடரில்  இதுவரை 20 முறை மோதியுள்ளது. அதில் சென்னை அணி 14 முறை வென்றுள்ளது. டெல்லி அணி 6 முறை வென்றுள்ளது. ஆகவே இன்றைய போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி பெறும் என சென்னை ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையிலேயே ஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டி இன்று நடை பெற உள்ளது.

பரபரப்பாக கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில்,  லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 4 அணிகள் மட்டுமே  ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஏற்கனவே நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில், சென்னை  அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டி, டில்லி அணிக்கும், ஐதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் டில்லி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று 2வது தகுதிச் சுற்று போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டி  சிஎஸ்கே அணிக்கும், டில்லி அணிக்கும் இடையே நடைபெற இருக்கிறது.

இந்த ஆண்டைய ஐபிஎல் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற 2 லீக் போட்டிகளிலும், சென்னை அணி மும்பை அணியை வீழ்த்திய வெற்றி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும்  மும்பை அணியும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும். இதன் காரணமாக போட்டி பரபரப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சிஎஸ்கே அணியில்  ஹர்பஜன் சிங், இம்ரான் தஹிர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று திறமையான பவுலர்கள் உள்ள நிலையில் மும்பை அணியை வீழ்த்துவது சாத்தியம் என்றே கணிக்கப்படுகிறது.

இந்தாண்டு ஐபிஎல்.தொடரில் முப்பை அணி, தான்  பங்கேற்ற 15 போட்டியிலும் ஷிகர் தவான், பிரித்வி ஷா  ஜோடியை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.