ஜெய்ப்பூர்

பிஎல் 2019 நேற்றைய 40 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை டில்லி அணி தோற்கடித்துள்ளது.

நடைபெற்று வரும் ஐபிஎல் 2019 போட்டியில் இதுவரை 39 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த போட்டிகளின் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் இருந்தன. நேற்று இந்த போட்டியின் 40 ஆம் லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்தது.

நேற்றைய போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல் அணி மோதியது. டாஸ் வென்ற டில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரரான ரஹானே தனது ஐபிஎல் போட்டியின் இரண்டாம் சதத்தை அடித்து 105 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அத்துடன் ராஜஸ்தான் அணியின் தலைவர் ஸ்மித் 50 ரன்கள் எடுத்தார். இந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தன. அடுத்து களம் இறங்கிய டில்லி அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த அனீயின் தொடக்க வீரரான தவான் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.    மற்றொரு வீரரான பிரித்வி ஷா 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் ஷ்ரேயாஸ் ஐயர் 5 ரன்களில் அவுட் ஆகவே ரிஷப் பந்த் களத்தில் இறங்கி தனது அபார ஆட்டத்தினால் 36 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.

டில்லி அணி19.2 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

[youtube-feed feed=1]