கொல்கத்தா:

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 13வது லீக் போட்டியில், டெல்லி டேர் டெவில்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்செய்த கொல்கத்தா ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது.  கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர். சுனில் நரேன் ஒரு ரன்னிலும், லின் 31 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இதன் காரணமாக கொல்கத்தா அணி ரசிகர்கள் சோகமயமாயினர்.  அடுத்து களமிறங்கிய உத்தப்பா 35 ரன், தினேஷ் கார்த்திக் 19 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். விளையாட்டு நிதானமாக சென்று கொண்டிருந்தது.

பின்னர்  நிதிஷ் ராணா அதிரடியான ஆட்டத்தை தொடங்கினார். அவர்  35 பந்தில் 59 ரன்னும், ஆந்ரோ ரஸ்ஸெல் 12 பந்தில் 41 ரன்களும் குவித்தனர். இதன் காரணமாக விளையாட்டு விறுவிறுப்படைந்தது.   இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்க்கு 200 ரன்கள் குவித்தது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தரப்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் மற்றும் டிரண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மட்டையை பிடித்தது. ஆனால், கொல்கத்தா அணியினிரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறத் தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக  கவுதம் கம்பீர், ஜேசன் ராய் ஆகியோர் இறங்கினர். ஆனால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். ரிஷப் பந்த், மேக்ஸ்வெல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். பந்த் 26 பந்தில் 43 ரன்னும், டி வில்லியர்ஸ் 22 பந்தில் 47 ரன்னும் எடுத்து அவுட்டானார்கள்.

இதனால் டெல்லி அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்

இதன் மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 71 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.