மும்பை:

ந்த ஆண்டு ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவுற்று பிளேப் ஆப் சுற்று போட்டிகள் இன்று முதல்  தொடங்குகின்றன. இன்றைய முதல் தகுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே மோதல் நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் தகுதி பெறும்-

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தியா முழுவதும் ப பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

சென்னை, , பெங்களூரு, ஐதராபாத், மும்பை,  ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி உள்ளிட்ட 8 அணிகள்  இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகின்றன. இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

தற்போதைய நிலையில், புள்ளிகளின் அடிப்படையில், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சிஎஸ்கேவும், 3வது இடத்திலும் கொல்கத்தா அணியும்,   4வது இடத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நான்கு அணிகளும் பிளே ஆப் சுற்றுககு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு அணிகள்  டில்லியிடம் தோல்வியடைந்து வெளியேறின.  இதைத்தொடர்ந்து பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று  தொடங்குகிறது.

இன்றைய முதல் பிளே ஆப் சுற்று ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இன்றைய ஆட்டத்தை காண உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்ற னர்.

செவ்வாய்க்கிழமை மும்பையில் நடக்கும் முதல் தகுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஹைதராபாத்-சென்னை மோதுகின்றன.

ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆட்டத்தின்போது ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டும் அதுபோலவே சன் ரைசர்ஸ் அணியை சிஎஸ்கே வெற்றி கொள்ளும் என ரசிகர்கள் விசிலடித்து காத்திருக்கின்றனர்.

வழக்கமான லீக் ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கிய நிலையில், பிளே ஆப் ஆட்டங்கள்  இரவு 7 மணிக்கு  தொடங்க இருக்கிறது.

விசில் சத்தம் ஒலிக்குமா என்பது இரவு தெரிய வரும்….