பெங்களூரு

பில் 2018 போட்டியில் 24 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2018 இன் 24 ஆம் லீக் ஆட்டம் நடைபெற்றது.   இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது.   முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.   துவக்கத்தில் இருந்தே பெங்களூரு அணி அபாரமாக விளையாடி வருகையில் கோலி அவுட் ஆனதை தொடர்ந்து களம் இறங்கிய வில்லியர்ஸ் ஒரே ஓவரில் 17 ரன்கள் எடுத்தார்.   அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரே ஓவரில் 3 விக்கட்டுகள் எடுத்ததும் குறிப்பிடத் தக்கது.

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது.   அடுத்து இறங்கிய  சென்னை அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட் இழந்தது சென்னை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.    அடுத்து இறங்கிய ஆட்டக்காரர்கள் ரன்களை குவித்த போதும் கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 71 ரன்கள் தேவைப்பட்டது.   17.2 ஆவது ஓவரில் சென்னை அணித் தலைவர் தோனி அரை சதம் எடுத்தார்.  அவர் இந்த ஆட்டத்தில் 70 ரன்கள் எடுத்தார்.  சென்னை அணி  இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் ஐபிஎல் 2018 போட்டியின் 25ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.