IPL 2016 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பந்துவீச முடிவு செய்தது.
களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் காம்பீர், உத்தப்பா ஜோடி தங்களது நீதானமான ஆட்டத்தின் மூலம் 101 ரன்கள் குவித்தது. காம்பீர் 54, உத்தப்பா 70 ரன்கள் எடுத்து இருவரும் ரன் அவுட்டாயினர். சென்ற போட்டி நாயகர்கள் யூசுப் பதான், ரஸ்ஸல் இந்த போட்டி தங்களது ஜாலம் எடுபடவில்லை. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 164 ரன்கள் சேர்த்தது.
165 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே விஜய், ஸ்டோனிஸ், வோரா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட் இலக்க கோல்கட்டா வெற்றி உறுதியானது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது.