IPL 2016: குஜராத் லயன்ஸ் அணி கடைசி பந்தில் அபார வெற்றி

Must read

மும்பையில் நேற்று IPL 2016 ஒன்பதாவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரைனா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது.
டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் முதலில் பந்துவீசினர் .ஆரம்பம் முதல் மும்பை அணி தொடர்ந்து விக்கெட்கள் இழந்தனர் 10 ஓவரில் 4 விக்கெட் இழந்து 59 ரன்கள் எடுத்தனர். ஜகாத்தி மற்றும் குல்கர்னியின் சிறப்பான பந்து வீச்சில் மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 143 ரன் எடுத்தது.
PhotoGrid_1460858501055
ஆரோன் பின்ச் தொடக்கம் முதல் தனது சிறப்பான பேட்டிங் முலம் தனி ஒருவராக குஜராத் வெற்றி பெற காரணமாக இருந்தார்.
கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ,பூமரஹவின் இறுதி ஓவரில் பின்ச் மற்றும் குல்கர்னி ஜோடி பொறுமையாக விளையாட தொடங்கியது கடைசி பந்தில் பின்ச் பூமரஹ் வீசிய பந்தில் நான்கு ரன்கள் அடித்து குஜராத் அணிக்கு வெற்றியைஉறுதி செய்தார்.
குஜராத் லயன்ஸ் 147 for 7 (பின்ச் 67*, ரெய்னா 27, மெக்லெனஹான் 4-21, பூமரஹ்2-32) மும்பை இந்தியன்ஸ் 143 for 8 (பார்த்திவ் 34, சவுதி 25, தம்பே 2-12, குல்கர்னி 2-19)

More articles

Latest article