பெங்களுரில் IPL 2016 நான்காவது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் இக்கு வீரத் கோலி தலைமைதாங்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது.
டிவில்லியர்ஸ் மற்றும் கோலியும் ஐதராபாத் பந்து வீச்சை சூறை ஆடினர், 14 சிக்சர் மழையால் பெங்களூரு ரசிகர்கள் உற்சாக அடைத்தனர். 11 ஓவரில் அணி 100 ரன்களை தொட்டது. இருவரும் அரைசதங்களை அடித்தனர் கோலி 75 ரன், டிவில்லியர்ஸ் 82 ரன் எடுத்தனர்.
PhotoGrid_1460518472062
இளம் வீரர் சர்ப்ராஸ் கடைசி ஓவர்களில் ரன்களை குவிக்க பெங்களூரு அணி 200 ரன்களை கடந்தது. ஆடுகளம் முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக திகழ்ந்த போதிலும், வங்கதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் அபார பந்து வீசிய அவர் தனது முதல் 3 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் கடைசி ஓவரில் சர்ப்ராஸ்கான் அதிரடி பேட்டிங் மூலம் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவிக்க உதவினார்.
இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் 58 ரன்களில் வாட்சனின் பந்து வீச்சில் வீழ்ந்ததும் ஹைதெராபாத் அணியின் நம்பிக்கையும் தகர்ந்து போனது. 20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 6 விக்கெட்டுக்கு 182 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 227/ 4 (வில்லியர்ஸ் 82, கோஹ்லி 75, சரபாராஸ் 35*) சன்ரைஸ் ஹைதெராபாத் 182/6 ( வார்னர் 58, ரெட்டி 32, வாட்சன் 2-20, சஹால் 2-43)