IPL 10: Mumbai Indians consolidated their top position with their sixth win in a row

 

ஐபிஎல் நடப்புத் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை ஈட்டியது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வென்றது.

 

மும்பையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 28 ரன்களும், பொல்லார்ட் 26 ரன்களும் எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 24 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் கம்மின்ஸ், அமீத் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய டெல்லி அணி, மும்பை அணியின் அனல் பறந்த பந்துவீச்சால் 24 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிறிஸ் மோரிஸும், ரபடாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரபடா 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். எனினும் டெல்லி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களே எடுக்க முடிந்தது. கிறிஸ் மோரிஸ் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மெக்கிளனகன் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுளையும் வீழ்த்தினர்.

 

இது மும்பை அணிக்கு 6-வது வெற்றி ஆகும். இதையடுத்து ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.