புனே: கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலுக்கு நடுவில், முதல் ஒருநாள் ஆட்டத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு பதிலாக, ஜோஸ் பட்லர் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லியம் லிவிங்ஸ்டோன் என்ற பேட்ஸ்மேன், அணியில் புதிதாக இடம்பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காயடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்கும், நாளையப் போட்டியில் இடம்பெறமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இவர் இடம்பெற வேண்டி, இவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயன் மோர்கனுக்கு, மைதானத்தில் பீல்டிங் டிரில் மேற்கொள்ளப்பட்டே, அவரின் உடல்தகுதியின்மை அறிவிக்கப்பட்டது.