நியூயார்க்

கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகெங்கும் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட் காயின் போன்ற பரிவர்த்தனைகளுக்கு மிகவும் ஆதரவு இருந்தது.  ஆயினும் இந்த கரன்சிகளின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் அதிக அளவில் இருந்ததால் மக்களிடையே ஓரளவு தயக்கமும் இருந்தது.  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சீனாவின் மத்திய வங்கி கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதித்தது.

அந்த தடையின்படி பிட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனை, வர்த்தகம் ஆகியவை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஏற்கனவே இத்தகைய செயல்பாடுகளுக்குச் சீனாவில் தடை உள்ள நிலையில் இது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டதால் இந்த பரிவர்த்தனை முழுவதுமாக முடங்கியது.

இந்நிலையில் கிரிப்டோ கரன்சி மதிப்பு சந்தையில் இறங்கத் தொடங்கி உள்ளது.  தற்போது பிட் காயின் மதிப்பு 43000 டாலருக்குக் கீழே சரிந்துள்ளது.  பிட் காயின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 1% மேல் சரிந்துள்ளது.  மற்ற முன்னணி கரன்சிகளின் மதிப்புக்களும் தாறுமாறாகச் சரிந்துள்ளன.  குறிப்பாக எதிரியம் 2% மற்றும் கர்டோனோ 2% மேலும் சொலானா 7% வரை சரிந்துள்ளன.

முக்கிய கிரிப்டோ கரன்சிகளின் சரிவு விவரம் இதோ

பிட்காயின் – 42,128.98 டாலர் (-1.64%)

எதிரியம் – 2853.17 டாலர் (-2.77%)

கர்டானோ – 2.24% (-5.74%)

பைனான்ஸ் – 339.88 டாலர் (-5.29%)

XRP – 0.9212 டாலர் (-3.19%)

சொலானா – 129.71 டாலர் (-7.45%)

போல்கடாட் – 28.73 டாலர் (-8.90%)

டோஜ்காயின் – 0.2043 டாலர் (-3.45%)

டெரா – 35.53 டாலர் (-8.39%)

அவலாஞ்சி – 64.60 டாலர் (-9.10%)

லைட்காயின் – 147.65 டாலர் (-4.45%)

அல்கோரண்ட் – 1.67 டாலர் (-7.01%)

பாலிகான் – 1.09 டாலர் (-3.43%)

ட்ரான் – 0.08824 டாலர் (-5.47%)