கனடாவில் சிறை பிடிக்கப்பட்ட வாவே நிறுவன நிர்வாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

Must read

பீஜிங்

சீனாவின் பிரபலமான வாவே நிறுவன நிர்வாகி மெங் வான்சோ கனடாவில் சிறை பிடிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகி நாடு திரும்பி உள்ளார்.

சீனாவின் முன்னணி தொஅலி தொடர்பு நிறுவனம் வாவே ஆகும்.  இந்த நிறுவனத்தின் தலைவரின் மகளும் நிறுவன நிர்வாக திகாரியும்னான மெங் வான்சோ மீது வங்கி மோசடி குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.  இதையொட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் கனடாவில் சிறை பிடிக்கப்பட்டார்.   அவர் மீது ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையொட்டி அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வழக்கு தீவிரமாக நடந்து வந்தது.  வாவே நிர்வாகம் மற்றும் சீன அர்சு மெங் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சட்ட விரோதமாக அவரை சிறைபிடித்துள்ளதாக வழக்கு நடத்தி வந்தன.   மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வழக்கறிஞர்களுடன் சமரச ஒப்பந்தம்  ஏற்பட்டதால் அவரை கனடா நீதிமன்றம் விடுவித்து அவரது பிரேஸ்லெட்டில் பொருத்தப்பட்டிருந்த ஜி பி எஸ் டிராக்கர் அகற்றப்பட்டது.

அவர் அரசு சிறப்பு விமானம் மூலம் சீனா சென்றார்.  அங்கு அவருக்குச் சீன அரசு அதிகாரிகள், வாவே நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர்.   சீனாவைப் பொறுத்தவரை மெங் வான்சோவின் விடுதலை சீன அரசுக்கு கிடைத்த பெரும் வெற்றி என அங்குள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article