ஐபிஎல்: பஞ்சாப் எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி 

Must read

அபுதாபி: 
ஞ்சாப் எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்க்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்க்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.  இந்த் அணியில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 42 ரன்கள் எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர்களில், ஜஸ்பிரித் பும்ரா, பொல்லார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், க்ருனால் பாண்டியா, ராகுல் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
136 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  சவுரப் திவாரி 45 ரன்கள் அடித்தார்.
பஞ்சாப் கிங்க்ஸ் பந்து வீச்சாளர்களில், ரவி பிஷ்னோய் இரண்டு விக்கெட்டையும், முகமது ஷமி, நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நாளை நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30  மணிக்குத் தொடங்க உள்ளது. 

More articles

Latest article