சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 422 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டிலும் ஓமிக்ரான் ஏற்கனவே காலடி எடுத்து வைத்து விட்டது. தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள்,. மாஸ்க் அணியாதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 136 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செயல்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள் குறித்துமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.