இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் 8ந்தேதி உலக மகளிர் தினமாக ஐ.நா.சபை அறிவித்து, உலகம் முழுவதும் மகளிரை போற்றும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய நாளில் மகளிருக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் பத்திரிகை.காம் இணைய செய்தி பத்திரிகையும் பெருமை கொள்கிறது.
மகளிர் தினத்தை போற்றும் வகையில், பொள்ளாச்சியை சேர்ந்த பிரபல குழந்தையின்மை சிறப்பு நிபுணரான டாக்டர் சுமதி ராஜா பத்திரிகை.காம் இணைய வாசகர்களுக்காக சிறப்பான சில தகவல்களை பகிர்ந்துள்ளார்…
வணக்கம்,
நான் டாக்டர். சுமதி ராஜா, பொள்ளாச்சியில் முதலில் துவங்கப்பட்ட மிஸஸ் ஹாஸ்பிடல் மற்றும் டெஸ்ட் டியூப் பேபி சென்டர் மருத்துவமனையில் இயக்குநர். மகப்பேறு மற்றும் குழந்தை யின்மை சிறப்பு நிபுணர் . எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் மருத்துவர், அதற்காக என்னுடைய தந்தைக்கு என்னுடைய நன்றியை இந்த பேட்டியில் தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு மருத்துவராக உங்கள் பட்டப்படிப்பில், சமூகத்தில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள், சவால்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்?
குடும்பத்தின் முதல் மருத்துவர் என்றாலே நீங்களே நினைத்துப்பார்க்கலாம், முதன் முதலில் மருத்துவபடிப்பிற்குப் போகும்போது எப்படி இருந்திருக்கும் என்று, ஆனால் ஆரம்பக்கால தயக்கங்களைத் தாண்டி கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லாரியில் எம்பிபிஎஸ் முடித்தபிறகு , சென்னை மருத்துவ கல்லூரியில் M.D(மகப்பேறு மருத்துவம்) பட்டம் பெற்றேன்.
இந்த கல்லுரியில் பட்ட மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமானது .கிடைத்தவுடன் மிகவும் சந்சோஷ பட்டாலும், பிரசவ வார்டு பணி என்பது மிகவும் கடினமாக இருந்தது, பல நாட்கள் தொடர்ந்து இருந்திருக்கிறேன், ஏன் என்றால் இந்த மருத்துவமனையில் தான் தினமும் அதிகம் பிரசவம் நடைபெரும்.ஒருவகையில் சுகமான சுமைதான்…அதன்பின் ஜெர்மனி சென்று (D.R.M) என்ற குழந்தை இன்மை சிகிச்சைக்கான மருத்துவப் பட்டய படிப்புக் காக கடல் கடந்து சென்ற அந்த பட்டயபடிப்பினை படித்தேன், அங்கேயும் ஆரம்பக் காலத்தில் அந்த நாட்டில் தங்கி படிக்க சற்று கடினமாக தான் இருந்தது.
அது மட்டுமல்லாமல் MRM என்ற மாஸ்டர் டிகிரி லண்டனில் யூனிவர்சிடியில் முடித்துள்ளேன். இவை அனைத்திற்கும் என் குடும்பத்தினரின் உறுதுணையும், என் கணவர் மரு.ராஜா உற்ற துணையாக இருந்ததால் எல்லாவற்றையும் கடந்து என்னால் நான் நினைத்த படிப்புகளை படிக்க முடிந்தது.
பெண்களின்இதுபோன்ற முயற்சிகளுக்கு குடும்பமும், கணவரும் உறுதுணையாக இருந்தால் நிச்சயம் எல்லா தடைகளை தாண்டியும் நம்மால் பயணிக்கமுடியும்
பொதுவாக தாய்மை என்பது பெண்களுக்கான இலக்கணமாக பார்க்கப்படுகிறது, இப்போது பெரும்பாலானோருக்கு இந்த சிக்கல் இருக்கிறது, இது சமூக மாற்றம், பருவநிலை மாற்றம், அவர்களின் உடல்நிலை இதெல்லாம் சிக்கல்களா அல்லது என்னதான் சிக்கல்?
குழந்தை இன்மை என்பதின் சதவிகிதம் (6 முதல் 10%) இப்போது அதிகரித்து இருக்கிறது. இதற்கு பெண் மட்டுமே காரணமல்ல, ஆண், பெண் இருவரும் காரணம். இருவருக்கும் உள்ள வேலை பளு,டென்ஷன், தூக்கமின்மை, உடற்பயிற்சி யின்மை, துரித உணவுகள், இதனால் வரும் ஹார்மோன் கோளாருகளால் வரும் உடல் பருமன், உடல் பருமனால் வரும் PCOD (கருமுட்டை பையில் நீர்கட்டி), Fibroid (கர்ப்பபைக்கட்டி), மாத விடாய் கோளாறுகள், கருமுட்டைப்பை டியூபில் அடைப்பு போன்ற வியாதிகளே குழந்தை இன்மைக்கு முக்கிய காரணம் ஆகும்.
ஆண்களுக்கும் உடல் பருமன்,கட்டுப்பாடு இல்லாத சக்கரை வியாதி , மது அருந்துதல்,சிகரெட் பழக்கம்,வளரும் பருவத்தில் வரும் அம்மை(புட்டாலம்மை) இதுவும் முக்கிய காரணங்கள். முடிந்தவரை இருபாலரும் வேலை பளு, டென்சடன், தூக்கமின்மை, உடற்பயிற்சி , ஆரோக்கிய மான உணவுகளை நோக்கி பயணப்பட்டாலே போதும், ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வேலைப்பளுவினால் வரும் டென்சன், அதனால் வரும் தூக்கமின்மை என பல பிரச்னைகளை நம்மை எதிர்நோக்கியுள்ளது. எனவே முடிந்தவரை மனதை எளிதாக வைத்துக்கொண்டால் குழந்தையின்மைக்கான தீர்வு எளிதாக கிட்டும்
அதிகபட்சம் பெண்கள் எத்தனை வயது வரை குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?
பெண்கள் எந்த வயதில் வேண்டுமானாலும் குழந்தை பெற்று கொள்ளலாம் .மாதவிடாய் நின்ற பிறகு ( மெனோபாஸ்) கூட இப்போது( IVF )டெஸ்ட் டியுப் பேபி சிகிச்சை மூலம் குழந்தை பெற முடியும்.
கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் குழந்தை உண்டாகாவிடில் முறையான ஆய்வகம் மற்றும் சிகிச்சை வசதி உள்ள மருத்துவமனையில் கணவர்,மனைவி இருவரும் பரிசோதனை செய்து பார்த்து கொள்வது நல்லது.
பெண்களுக்கு 35 வயதுக்கு பிறகு அவர்களுடைய ஹார்மோன் அளவுகள் குறைம ஆரம்பிக்கும். வெற்றி வாய்ப்பு குறைய ஆரம்பிக்கும் .40 வயதுக்கு மேல் அவர்களுடைய கருமுட்டை நல்ல நிலையில் இல்லாவிட்டால் கருமுட்டை தானம் மூலம் முயற்சி செய்யலாம்.
சமீபகாலமாக செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் கருத்தரிப்பு பெரும்பாலும் பலனளிக்க வில்லை என்று சொல்கிறார்கள் அது பற்றிய உங்கள் கருத்து?
நவீன கருத்தரிப்பு சிகிச்சை களில் ஹார்மோன் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு பிறகு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் மாத்திரைகள் அல்லது ஹார்மோன் ஊசிகள் மட்டும் பெற்று குழந்தை பாக்கியம் பெறுபலனவர்கள் இருக்கிறார்கள் .
நவீன முறைகள் IUI ,IVF ,ICSI,IMSI என்று உள்ளது .உலக அளவில் இந்த சிகிச்சைகள் மூலம் வெற்றி வாய்ப்பு 30 முதல் 40 சதவிகிதம் உள்ளது. அது சிகிச்சைப்பெறுவர்களின் மனநிலையைப் பொறுத்தது. சிகிச்சை ஆரம்பத்த உடனேயே எதிர்பார்ப்பதும் தவறு. ஒரு வித அதிக எதிர்பார்ப் பும் மனநிலையை சஞ்சலப்படுத்தும், அது ஒரு வித மன அழுத்தத்தை உண்டு செய்யும், சிகிச்சை ஆரம்பித்தவுடன் குழந்தை கிடைக்குமா? கிடைக்காத என்ற எதிர்பார்ப்பு பெண்க ளுக்கு அதிகமாக இருக்கும். அந்த அச்சத்துடன் இருந்தால் சிகிச்சை எப்படி வெற்றியடையும். இஙகே நம்பிக்கை மிக அவசியம். ஓரு முறை முயற்சி கிட்டவில்லை என்றால் அடுத்த முறை முயற்சித்துத்தான் ஆகவேண்டும். இவ்வளவு முயற்சியில்தான் இந்த தொழில்நுட்பங்கள் சாத்தியமடைந்துள்ளன
பேலியோ மூலமாக பலருக்கு உங்கள் வழிகாட்டல் மூலமாக குழந்தை பெற்றுள்ளனரே, அது பற்றிய உங்கள் அனுபவத்தை எங்களிடம் பகிரலாமே, குழந்தை பெறுதல் குறித்து இப்போதைய தலைமுறைக்கு உங்கள் அறிவுரை என்ன?
பெண்களின் மகப்பேறின்மைக்கு முக்கியமான காரணம் உடல் பருமன் மற்றும் அதனால் வரக்கூடிய ஹார்மோன் பிரச்சினைகள் .மாதவிடாய் கோளாறுகள், கருமுட்டை பையில் நீர்கட்டி ,கர்ப்பபை கட்டிகள் ,என்டோமெட்ரியோசிஸ் ,
தைராயிட் பிரச்சனைகள். ஆண்கள் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் பெண்களுக்கு அதிகமாவ தால் இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது . இவர்களுக்கு பேலியோ உணவு முறை மாற்றம் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடன் பருமன் குறைத்தப்பிறகு இவர்களுடைய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் குறைய ஆரம்பிக்கிறது .
100% பிசிஒடி பிரச்சனைகள் இந்த உணவுமுறை மாற்றத்தால் கட்டுப்படுகிறது .அதனால் என்னி டம் அனைத்து குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் முதல் 3 மாதங்களுக்கு பேலியோ உணவை ஆரம்பித்து பிறகு சிகிச்சை அளிக்கும் போது வெற்றி வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
எங்களுடைய சிகிச்சை முறையின் வெற்றி வாய்ப்பு இரட்டிப்பாகிறது .இந்த உணவு முறையில் ஆண்களுக்கும் உடல் பருமன் குறைவதோடு , சக்கரை நோய் ,இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது .டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு அதிகரித்து ,விந்து அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக் கும். அவர்களுக்கும் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
எனவே இன்றைய தலைமுறைக்கு எங்கள் ஆலோசனை என்னவெனில் ஆரோக்கியமான உணவு, டென்சன் இல்லாத வாழ்க்கை முறை முறையை வாழ ஆரம்பித்தால் நிச்சயம் குழந்தையின்மை ஒரு தடையில்லை. இதை குறிப்பாக பெண்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். இதை ஆண்கள் அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும்.
-செல்வ முரளி
அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்