அபுதாபி: சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச டி-20 தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் ரோகித் ஷர்மா 8வது இடத்திலும், விராத் கோலி 11வது இடத்திலும், ஷிகர் தவான் 13வது இடத்திலும் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 தொடரும் இந்தப் பட்டியலுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 72 ரன்களை அடித்ததன் மூலம் விராத் கோலி 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டு போட்டிகளிலும் 40 மற்றும் 36 ரன்களை அடித்ததன் மூலம் 3 இடங்கள் முன்னேறி 13வது இடம் பிடித்துள்ளார் ஷிகர் தவான்.

ரோகித் ஷர்மாவைப் பொறுத்தவரை, இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் உடன் 8வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த இருவருமே சமமாக 664 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பெளலர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் வாஷிங்கடன் சுந்தர் 8 இடங்கள் முன்னேறி 50வது இடத்தைப் பெற்றுள்ளார்.