சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி இந்த ஆண்டு சென்னையில் நடைபெறுகிறது.

 

4வது சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி ஜூன் 13 முதல் 17 வரை சென்னையில் நடைபெறும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் “சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடைபெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன், இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை வழங்கியதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி” தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]