சென்னை:

றுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்போலோ நிர்வாகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில்  தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பபோலோ மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

இதற்கு  தடை விதிக்க கோரியும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையுடன்  அப்பல்லோ சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 9ந்தேதி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு,   அப்பலோவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை  90 சதவீதம் முடிந்துவிட்டதால், ஆணையம் சட்டப்படி விசாரணையை தொடரலாம் என்று அறிவித்த நீதிமன்றம்,  ஆறுமுகசாமி ஆணையத் திற்கு தடை கோரிய அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து அப்போலோ மருத்துவர்கள்  10ந்தேதி மற்றும் 11ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியது. ஆனால், அப்போலோ மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில்,  சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் கடந்த வாரம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.