சென்னை,

டிகர் விஜய் நடித்துள்ள வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், திமுக மாநிலங்களவை எம்.பி.யும் மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் விஜய். இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என பாரதியஜனதா தலைவர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதற்க திமுக, காங்கிரஸ் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாஜகவின் அராஜக போக்குக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் கண்டனம்  தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, ‘அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தில் தலையிட்டால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’,  ‘கருத்து சுதந்திரத்திலும் கலையிலும் யாரும் தலையிட கூடாது’ என்று அவர் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் காட்டமாக கூறினார்.