டில்லி:

லப்பு திருமணங்களைத் தடுக்க எவக்கும் அதிகாரம் இல்லை என்று  உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், கலப்பு திருமணம் செய்துகொள்வோர் மீது கொடூரத் தாக்குதல்கள் நடப்பதும், கொலை செய்யப்படுவதும் நடக்கின்றன.

குறிப்பாக ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார் ஆகிய பகுதிகளில் இருக்கும் ‘’காப்” என்ற கட்டப்பஞ்சாயத்து அமைப்பினால்  கொடூர சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதைத்தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கலப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்க மத்திய அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இது குறித்த சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை. இந்த நிலையில், குறிப்பிட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா. நீதிபதிகள் ஏஎம்.கன்வீல்கர், சந்திராசூட் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “சாதி மாறி கலப்புத் திருமணம் செய்பவர்களை எவரும் தடுக்க கூடாது. இரு வேறு சாதியினர் காதல் திருமணம் செய்து கொள்வதை தடுக்க எவருக்கம் அதிகாரம் கிடையாது. மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்கும் விதமாக தனி சட்டம் இயற்றக்கோரி ஏற்கனவே உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டும் இதுவரை அதற்கனெ தனிச்சட்டம் ஏன்  இயற்றவில்லை?.

வட இந்தியாவில்  கலப்புத் திருமணம் செய்பவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தும் காப் என்ற கட்டப்பஞ்சாயத்து அமைப்பிற்கு தடை விதிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், நீதிமன்றம் அதை கையில் எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்” என்று தெரிவித்தார்கள்.