கொஹிமா: 
நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பலியாகினர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானார்.
மான் மாவட்டம் ஒட்டிங் கிராமத்தில் நக்கல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்துப் பாதுகாப்புப் படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர். இந்நேரத்தில் பணியிலிருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்புப் படையினர் தற்காப்புக்குச் சுட்டதில் பொதுமக்கள் சிலர் பலியாகினர்.  இந்த சம்பவத்திற்குக் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கத்துடன் அப்பிரிவினர் சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.