நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: காங்கிரஸ் குழு அமைப்பு

Must read

புதுடெல்லி: 
நாகாலாந்து ராணுவத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவைக் காங்கிரஸ் அமைத்துள்ளது.
நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பொதுமக்கள் 14 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரிக்க 5 பேரைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஜிதேந்திர சிங், அஜோய் குமார், கவுரவ் கோகோய், ஆண்டோ ஆண்டனி ஆகியோர் அடங்கிய  4 பேர் கொண்ட குழுவைக் காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்தக் குழுவானது நாகாலாந்து சென்று சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தி ஒரு வாரத்தில் காங்கிரஸ் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

More articles

Latest article