புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாடகை ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் தேவை அதிகரித்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் இவற்றின் தேவை 2 மடங்கு அதிகரித்துள்ளது. இவை ‘நேர’ வாடகையில் எடுக்கப்படுகின்றன. பெரிய வாடகை ஜெட் விமானங்களுக்கு, தற்போதைய காலகட்டத்தில் மணிக்கு ரூ.4 லட்சம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண காலங்களைவிட, இது இரு மடங்குக்கும் மேல் அதிகம்.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைவிட, இத்தேர்தலில் விறுவிறுப்பு அதிகம். அரசியல் கட்சிகளுக்கு அதிக வாடகை விமானங்களும் ஹெலிகாப்டர்களும் தேவைப்படுகின்றன. ஆனால், தேவையான அளவிற்கு அவை கிடைப்பதில்தான் சிக்கல் நிலவுகிறது.
மேலும், இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதும், நெருக்கடிக்கான ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்கின்றன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள். ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்லும், மே 19ம் தேதி இறுதிகட்ட தேர்தலும் நடைபெறுகின்றன.
– மதுரை மாயாண்டி