டில்லி

மெரிக்காவின் புகழ்பெற்ற இண்டெல் கேபிடல் நிறுவனம் ஜியோவில் $253.5 மில்லியன்  அதாவது ரூ.1894 கோடி அளவில் முதலீடு செய்து 0.39% பங்குகளைக் கைப்பற்றி உள்ளது.

கொரோனா பாதிப்பில் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.   பங்குச் சந்தையில் பல நிறுவனங்கள் மதிப்பிழந்து வருகின்றன.   ஆனால் ரிலையன்ஸ் குழும நிறுவனமாக ஜியோவில் பல நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.

இதுவரை முகநூல், சில்வர் லேக், உள்ளிட்ட 11 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் 12 ஆம் நிறுவனமாக இண்டெல் கேபிடல் நிறுவனம் இணைந்துள்ளது.   கடந்த ஏப்ரல் மாதம் முகநூல் நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்தது.  பங்குச் சந்தை உலகில் பெரிதும் பேசப்பட்ட அந்த நிகழ்வுக்குப் பிறகு முதலீடுகள் மேலும் தொடர்ந்தன.

ஜியோவின் பங்குகளில் அதிக அளவில் 9.99% பங்குகளை முகநூல் கைபப்ற்றி உல்ளது.  அதன்பிறகு சில்வர் லேக், விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆர், முபதாலா, சில்வர் லேக்,  ஏ டி ஐ ஏ, டி பி ஜி, எல் காட்டர்டன். பி ஐ எஃப் நிறுவனங்கள் முதலீடுகளைச்  செய்தன.  தற்போது இண்டெல் நிறுவனம் தனது $253.5 மில்லியன் அதாவது ரூ.1864 கோடி முதலீட்டின் 0.39% பங்குகளைக் கைப்பற்றி உள்ளது.