திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. “தேசிய விருதுக் குழு கேரளாவை அவமதித்துள்ளது” என குற்றம் சாட்டி உள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட வெற்றிக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, சிறந்த இயக்குநருக்கான விருது ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்காக சுதிப்தோ சென்னுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேளர முதல்வர் பினராயி விஜய நாட்டின் உன்னத பாரம்பரியம் ‘அவமதிக்கப்பட்டுள்ளது என நடுவர் மன்றத்தை சாடியுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருதுகளை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. இதில் சிறந்த படமாக இந்தி படம் ‘KATHAL’ படத்துக்கு சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காமெடியான கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுபோல சிறந்த நடிகர்களுக்கான விருது, ஷாருக்கான், விக்ராந்த் மாசி பகிர்ந்து கொள்கின்றனர், , ‘சாட்டர்ஜி vs நார்வே’ இந்திப் படத்தில் நடித்த ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென்னுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப் பட்டுள்ளது. அதுபோல சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதும் கேரள ஸ்டோரி படத்துக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது அறிவித்ததற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம். கேரளாவுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு அங்கீகாரம் கொடுத்து கேரளாவை அவமதித்துள்ளது விருதுக் குழு என்றும், ‘ ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

கேரளா ஸ்டோரி சர்ச்சை:
கடந்த 2023ம் ஆண்டு வெளியான மலையாள படமான கேரளா ஸ்டோரி படத்தை, பிரபல இயக்குனர் விபுல் ஷா தயாரித்திருந்தார். இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் விற்பகப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு எழுந்தது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
இதன் காரணமாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனால் படத்தை தமிழ்நாட்டில் அந்த படத்தின், தமிழ் பதிப்பை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகளில் இன்று வெளியாக இருந்த தி கேரளா ஸ்டோரி படத்தின் தமிழ் பதிப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை. ஆனால், உச்சநீதி மன்றம் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்துவிட்டதால்,நாடு முழுவதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் திமுக அரசு இந்த படத்தை வெளியிட மறைமுகமாக தடை விதித்த நிலையில், கேரள ஸ்டோரி தமிழ் பதிவு வெளியாகவில்லை. ஆனால், ஹிந்தி பதிப்பு மட்டும் சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கேரள ஸ்டோரி படத்துக்கு ஏன் தேசிய விருது வழங்கவில்லை என முதவல்வர் பினராயி கேள்வி எழுப்பி உள்ளார். தேசிய தேர்வு குழுவின் நடவடிக்கை சங்க பரிவாரின் சித்தாந்த நிகழ்ச்சி நிரலை பிரதிபலிப்பதாக குற்றம் சாட்டினார். “வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த சினிமாவை ஒரு ஆயுதமாக மாற்றும் சங்க பரிவார் நிகழ்ச்சி நிரலை அவர்கள் செயல்படுத்துகிறார்கள்,” என்று அவர் கூறினார். ஜனநாயக சிந்தனை கொண்ட அனைத்து குடிமக்களும் மலையாளிகளும் ஒரு பெரிய அநீதி என்று அவர் விவரித்ததற்கு எதிராகப் பேச வேண்டும் என்று விஜயன் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மலையாளியும், நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக நம்பிக்கையாளர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். கலையை வகுப்புவாதத்தை வளர்க்கும் ஆயுதமாக மாற்றும் அரசியலுக்கு எதிராக நாம் அணிதிரள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கூடுதலாக, கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டியும் தனது மறுப்பைத் தெரிவித்தார். X இல் ஒரு பதிவில், கேரள வெற்றியாளர்களான ஊர்வசி, விஜயராகவன் மற்றும் கிறிஸ்டோ டோமி ஆகியோரை அவர் வாழ்த்தினார், ஆனால் ‘தி கேரளா ஸ்டோரி’ விருது வழங்கும் முடிவை விமர்சித்தார்.
“வெறுப்பு மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் ஒரு படமான ‘தி கேரளா ஸ்டோரி’யை அங்கீகரிப்பது, மற்ற அனைத்து விருதுகளையும் மதிப்பிழக்கச் செய்கிறது,” என்று அவர் எழுதினார்.
‘தி கேரளா ஸ்டோரி’ சமீபத்திய ஆண்டுகளில் வெளியான படங்களில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை சுட்டிக்காட்டும் படங்களில் முதன்மையானதாக பார்க்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த பெண்களின் தீவிரமயமாக்கல் மற்றும் கடத்தலை இந்தப் படம் சித்தரிக்கிறது, இது மிகைப்படுத்தப்பட்டதாகவும் தவறாக வழிநடத்துவதாகவும் பலர் நிராகரித்துள்ளனர். இதுபோன்ற போதிலும், இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, உலகளவில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த சர்ச்சைக்குரிய படத்துக்கு சில விருதுகள் அறிவித்துள்ளதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கொந்தளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளாவை அவமதிக்கவும் வகுப்புவாதத்தை பரப்பவும் பொய்களால் உருவாக்கப்பட்டது” என்று கூறினார். அத்தகைய ஒரு படத்தை கௌரவிப்பதன் மூலம், விருதுகள் நடுவர் மன்றம் “மத சகோதரத்துவம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக்காக நிற்கும் இந்திய சினிமாவின் உன்னத மரபை அவமதித்துள்ளது” என்றும், தேசிய தேர்வு குழுவின் இந்த நடவடிக்கை சங்க பரிவாரின் சித்தாந்த நிகழ்ச்சி நிரலை பிரதிபலிப்பதாக முதல்வர் மேலும் குற்றம் சாட்டினார். “வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த சினிமாவை ஒரு ஆயுதமாக மாற்றும் சங்க பரிவார் நிகழ்ச்சி நிரலை அவர்கள் செயல்படுத்துகிறார்கள்,”
இது ஜனநாயக சிந்தனை கொண்ட அனைத்து குடிமக்களும் மலையாளிகளும் ஒரு பெரிய அநீதி என்று அவர் விவரித்ததற்கு எதிராகப் பேச வேண்டும் என்று வலியுறுத்தியவர், “ஒவ்வொரு மலையாளியும், நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக நம்பிக்கையாளர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். கலையை வகுப்புவாதத்தை வளர்க்கும் ஆயுதமாக மாற்றும் அரசியலுக்கு எதிராக நாம் அணிதிரள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
[youtube-feed feed=1]71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. தமிழில் சிறந்தபடமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு