சென்னை:
வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.