டில்லி

மத்திய அரசு அறிவித்த ஜி எஸ் டி இழப்புக்கு பதில் கடன் தொகை பெற 13 மாநில அரசுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தலால் நாடெங்கும் அனைத்து வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.  இதனால் ஜி எஸ் டி வருவாய் குறைந்தது.  ஆகவே மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி எஸ் டி இழப்புக்கான தொகையைப் பெற இயலாத நிலை அனைத்து மாநிலங்களுக்கும்  உண்டானது.   இதையொட்டி மாநிலங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் தேதி நடந்த ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கான இழப்பீட்டு தொகை தற்போது குறைந்துள்ளதால் மத்திய அரசு இரு திட்டங்களை அறிவித்தது.  அதில் முதல் திட்டத்தின் படி ரூ,97000 கோடி வரை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் கடன் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் திட்டப்படி மாநிலங்கள் சந்தித்துள்ள ஜி எஸ் டி வருவாய் பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியையும் ஒட்டு மொத்தமாக கடனாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்துக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன,   பல மாநில அரசுகள் கடன் பெற விரும்பவில்லை என இந்த திட்டத்தை நிராகரித்தன.   இந்நிலையில் இந்த திட்டத்துக்கு இதுவரை 13 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இதில் முதல் திட்டத்தின் கீழ் கடன் பெற ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், அரியானா, மத்திய பிரதேசம், மேகாலயா, சிக்கிம், திரிபுர, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஒரிடா ஆகிய மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இரண்டாம் திட்டத்தி9ன் கீழ் மணிப்பூர் மாநிலம் மற்றும் விருப்பம் தெரிவித்துள்ளது.