பெங்களூரு:
ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் விஷ வாயு தாக்கியதில் ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர் கப்பல்களில் ஒன்று ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா. . 22 தளங்கள் கொண்ட இந்த போர் கப்பலில் 1600 பேர் வரை பயணம் மேற்கொள்ள முடியும்
இந்த கப்பலை பழுது பார்க்கும் பணி கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் நடைப்பெற்று வருகிறது. கப்பலின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வாயு கசிவு தொடர்பான பழுது பார்க்கும் பணியில் ராகேஸ் குமார், மாலுமி மோகன்தாஸ் கோலம்ப்கர் ஆகியோர் ஈடுபட்டிருந்தபோது, விஷ வாயு தாக்கி பலியானதாக இந்திய கப்பல் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.