டில்லி:
“அணுசக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சமீபத்திய வெளிநாட்டு சுற்றுப் பயணம் தோல்வியில் முடிவடைந்து விட்டது” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி  செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி, ” அணுசக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சமீபத்திய வெளிநாட்டு சுற்றுப் பயணம் தோல்வியில் முடிவடைந்து விட்டது.
modi-in-flight
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கூட்டப்பட்ட அணுசக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில், இந்தியாவின் முயற்சியை சீனா சீர்குலைத்துவிட்டது. இதன் மூலம் இந்தியா மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நிலைப்பாடு ஆக்ரோஷம் அடைந்துள்ளது.
மொத்தத்தில்  மோடியின் வெளிநாட்டுப் பயணத்தை அர்த்தமற்றதாக்கிவிட்டது”  என்று தெரிவித்தார்.