அமெரிக்கா- டெக்சாசில்  வெதெர்போர்ட் மாவட்ட நீதிமன்ற உள்ளது.

அந்த  நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்கப் அறையில் இருந்த கைதிகள் சிறைக்காவலர் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

parker jail 2'

கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வெதெர்போர்ட் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளதரைத்தளத்தில் சிறிய கைதிகளை அடைக்கும் அறை உள்ளது. அங்குக் காவல்பணியில் இருந்த காவலர் ஒருவர் கைதிகளுடன் உரையாடிகொண்டிருந்த வேளையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்தார். இதனைக்கண்டு பதறிய கைதிகள் தங்களின் சிறைக்கதவினை உடைத்து வெளியே வந்து காவலர் உயிரைக் காக்க கூச்சலிட்டனர்.

இவர்களின் கூச்சலைக் கேட்டு முதல்மாடியிலிருந்து ஓடிவந்த மற்றக் காவலர்கள் என்ன நடைபெற்றுகொண்டு இருந்தது எனப் புரியாமல் திகைத்தனர். கைதிகள் காவலரைத் தாக்கிவிட்டனரோ என்று கூட நினைத்தனர். ஃபிலாய்ட்ஸ்மித் எனும் கைதி அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தவுடன் உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கப் பட்டது. பார்க்கர் கவுண்டி காவலர் அமைப்பு அந்தக் காவலர்குறித்த விவரத்தினை வெளியிட மறுத்துவிட்டது.

parker jail
அந்தக் காவலாளியிடம்  சாவிக் கொத்தும், ஒரு துப்பாக்கியும் இருந்தது எனினும், அதனைப் பயன்படுத்தி தப்பிக்க முயற்சிசெய்யாமல் சிறைக்கைதிகள் காவலர் உயிரைக் காக்கமட்டும் ஆர்வம் காட்டியது காவலதிகாரிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.