சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுத்தது இந்தியா: விசா நடவடிக்கையும் நிறுத்தி வைப்பு

Must read

டெல்லி: சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுத்திருக்கிறது இந்தியா.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 600ஐ தாண்டி இருக்கிறது. 30,000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் உலக நாடுகள் அனைத்தும், சீனர்களை தங்கள் நாட்டினுள் நுழைய தடை விதித்து இருக்கிறது. இந்திய அரசும், சீனர்கள் நுழைய தடை விதித்துள்ளது.

அதாவது பிப்., 5ம் தேதிக்கு முன்பு வரை விசா பெற்ற சீனர்கள், உலகின் எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என்று குடியுரிமைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கும் இப்போது அனுமதி இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. அதாவது ஜனவரி 15ம் தேதிக்கு பின்னர் அந்த நாட்டுக்கு சென்று அங்கிருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தரை, வான் மற்றும் கப்பல் வழியாக கூட இந்தியாவில் நுழைய அனுமதி இல்லை. சீனர்களுக்கான விசா வழங்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறது.

More articles

Latest article