பெங்களூரு

கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இன்ஃபோசிஸ் நிறுவனம் பெங்களூரு நகரை தலைமையகமாக கொண்டு நாடெங்கும் இயங்கி வருகிறது.   சர்வதேச அளவில் பிரபலமான இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன அலுவலகங்கள் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டது.  அனைத்து ஊழியர்களும் தங்கள் இல்லத்தில் இருந்தே பணி புரிந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் படிப்ப்டியாக குறைந்து வருகிறது.    ஆயினும் மூன்றாம் அலை பாதிப்பு விரைவில் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  எனவே கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இயங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் அறிவுறுத்தி உள்ளன.

இந்நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது அலுவலகங்களை மீண்டும் திறக்க உள்ளதாகவும் ஊழியர்கள் விரைவில் அலுவலகங்களில் இருந்து பணி செய்ய வேண்டி இருக்கும் எனவும் தகவல் அளித்துள்ளது.   அத்துடன் கொரோனா மூன்றாம் அலை பரவலை முன்னிட்டு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பணி புரிய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.