சென்னை: உணவுப்பொருட்களின் மீதான பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது; ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இப்போதுகூட அதைப் பற்றிக் கவலைப்படவில்லை  என காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் பணவீக்கம் குறைந்த ஏறி காணப்படுகிறது. இதனால்,  விலைவாசி அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், உணவு பொருட்களின் பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதம் 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் உயரும் போது, உணவு பொருட்கள் விலையானது கடுமையாக ஏற்றம் கண்டு வருகிறது. உணவுப் பொருட்களின் விலை பத்து முதல் இருபது சதவீதம் உயர்ந்துள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம்,  பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார் அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது!

உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது.’ என பதிவிட்டுள்ளார்.