டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில், குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி, அப்ரூவராக மாற விரும்புவதாக கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சிதம்பரம் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது  ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம்,  வெளிநாடு முதலீடுகளைப் பெற கார்த்தி சிதம்பரம் உதவியுடன்,  தடையில்லா சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக சிபிஐ,  அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில்  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்திராணி முகர்ஜியும் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தனது  மகள் ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர்  டில்லி பாட்டியாலா நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதி இருந்ததாகவும், அதில், தான்  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் கூறியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திராணி பாஜக  அரசால் மிரட்டப்பட்டாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், இந்திராணி முகர்ஜியிடம் நடைபெறும் விசாரணையை தொடர்ந்து, அது குறித்து சிபிஐ அளிக்கும் பதிலின் அடிப்படையிலேயே அவர்அரசுத் தரப்பு சாட்சியாக சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும். என்று கூறப்படுகிறது.

இந்திராணி முகர்ஜி இந்த திடீர் மனமாற்றம்  சிதம்பரம் குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.