டில்லி,

தார் வழக்கில், அரசியல் சாசனத்தின்படி தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமையே என உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பை அனைத்து எதிர்க்கட்சியினரும் வரவேற்றுள்ளனர்.  தீர்ப்பு குறித்து கருத்து தெரி வித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பாசிச சக்திகளுக்கு கிடைத்த பெரிய அடி என்று கூறி உள்ளார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி:

உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பு….   ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த வெற்றி, பாசிச சக்திகளுக்கு ஒரு பெரிய அடி, கண்காணிப்பு அரசியலின் மூலம் அடக்குமுறை என்ற பாஜக கொள்கை உரக்க மறுக்கப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்  ப.சிதம்பரம்:

இன்று உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு மைல்கல் தீர்ப்பாகும். அரசியல் சாசன சட்டம் உருவான நாளிலிருந்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமை. 1947-ல் வென்ற சுதந்திரம் வளமையாக்கப்பட்டு விஸ்தாரமாக்கப்பட்டுள்ளது. தனிநபர் உரிமை என்பது சுய விடுதலையாகும். வாழ்க்கையின் அன்னியமாகா ஒரு அங்கமாகும். இந்தத் தீர்ப்பின் மூலம் அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ற்கே ஒரு புதிய பெருமை கிடைத்துள்ளது. இதன்படி இந்தியத் தண்டனைச் சட்டம் 377-ஐயும் புதிய விதமாக அணுக வேண்டும்.

 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா:

உச்ச நீதிமன்றத்தின் பாதைத்திறப்புத் தீர்ப்பு. சுதந்திரத்திற்கான மிகப்பெரிய வெற்றி. மோடி அரசின் திட்டங்களுக்கு முடிவு கட்டியது உச்ச நீதிமன்றம்.

சல்மான் குர்ஷித்: நம் வாழ்க்கையில் குறுக்கிட்டும் சக்திகளின் தோல்வியைக் கொண்டாடுவோம்.

பா.ஜ.  சுப்பிரமணியசாமி: தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமையே என்று உச்ச நீதி மன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இப்போது ஆதார் மாற்றத்தின் மீதும் இது பொருத்தப்பட வேண்டும்

சீதாராம் யெச்சூரி: அனைத்து வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்கள், மற்றும் இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்: உச்ச நீதிமன்றத்துக்கு பாராட்டுக்கள். ஆதார் சட்டமாயினும் எந்த ஒரு சட்டமாயினும் அறிவுக்கும், நியாயத்துக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.