
சென்னை:
சென்னையில் உணவகம் ஒன்றில் மறைமுகமாக செயல்பட்டு வந்த ஹுக்கா எனப்படும் புகைக்கும் பார் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாரை திருட்டுத்தனமாக அனுமதியின்றி நடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 18 ஹுக்கா புகைக்கும் குழாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் ப்ரூ அண்ட் க்ரூ என்ற பிரபலமான உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் 5வது மாடியில் டர்பலண்ஸ் என்ற ஹூக்கா பார் ரகசியமாக செயல்பட்டு வந்தது. இந்த ஹுக்கா குழாய் மூலம் போதை புகையை இழுத்து இளைஞர்கள் போதையேற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை உதவி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து பாரை நடத்தி வந்த த ரமேஷ், சுரேஷ், விமல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த புகைக்க பயன்படுத்தப்பட்ட 18 புகைக்கும் பைப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.அதைத்தொடர்ந்து அந்த பாரை இழுத்து மூடி போலீசார் சீல் வைத்தனர்.
உயிரை வாங்கும் ஹுக்கா… (ஷீஷா) புகைப்பதால் உடல் நலக் குறைவுகள் ஏற்படும் என்று அறிவுறுத்தப்பட்டாலும், பலர் போதையை விரும்பி திருட்டுத்தனமாக சென்று ஹுக்கா புகைத்து வருகிறார்கள்.
இந்த ஹுக்கா பேர் ஏற்கனவே 2 தடவை மூடப்பட்ட நிலையில், தற்போது 3வது முறையாக மூடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]