‘மர்ம தேசம்’ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலாமான எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் இன்று காலமானார்.
சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட 66 வயதாகும் இந்திரா சௌந்தர்ராஜனின் திடீர் மறைவு எழுத்துலகிலும் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்தில் துணைப் பொறியாளராகப் பணியாற்றிய சௌந்தர்ராஜன் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது தாயின் பெயரான இந்திரா எனும் பெயரை தனது பெயருடன் இணைத்து இந்திரா சௌந்தர்ராஜன் எனும் பெயரில் கதைகளை எழுதி வந்தார்.
மதுரையில் உள்ள டிவிஎஸ் நகர்ப் பகுதியில் வசித்து வந்த இந்திரா சௌந்தர்ராஜன், என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம், அத்திப்பூக்கள் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களை எழுதியுள்ளார்.
இந்திரா சௌந்தர்ராஜனின் ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற கதை 1978 ஆம் ஆண்டு கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்றது. ‘என் பெயர் ரங்கநாயகி’ எனும் கதை தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலிக்கான மூன்றாம் பரிசினைப் பெற்றது.
இவரது கதை வசனத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிருங்காரம் எனும் திரைப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது.
இந்நிலையில்தான் நேற்று மதுரையில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார் இந்திரா சௌந்தர்ராஜன், அவரது மறைவு எழுத்துலகிலும் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.