புதுடெல்லி: இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்தரா போன்ற விமான நிறுவனங்கள், வெளிநாட்டுப் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 25ம் தேதி, இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகள் பல விதிமுறைகளுடன் துவங்கப்பட்டன. ஆனால், இதற்கு மராட்டியம் & சத்தீஷ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களிலிருந்து எதிர்ப்பும் எழுந்தது.

இந்நிலையில், இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் விஸ்தரா உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள், வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவிற்கு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம், வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்கு இன்னும் அனுமதியளிக்காத நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.