டில்லி:
எய்ம்ஸ் மருத்துவமனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு தவறுதலாக டயாலிசிஸ் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரேகாதேவி என்ற பெண்மணி கடும் வயிற்றுவலியால் தவித்து வந்தார். அவரது சொந்த ஊரில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் வயிற்று வலி தீரவில்லை.
ஆகவே .மேல் சிகிச்சைக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூத்த மருத்துவ பேராசிரியர் தலைமையிலான குழுவினர் வயிற்று வலிக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். வயிற்று வலி குறையாதை அறிந்த பெண்ணை மீண்டும் பரிசோதனை நடத்தியதில் அப்பெண்ணுக்கு சிறுநீரகோளாறு எதுவும் இல்லை என்பதும் தவறுதலாக டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.
தவறான சிகிச்சை அளித்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவமனை டீன் டாக்டர் ஓய்.கே. குப்தா ,உத்தரவிட்டார். முன்னதாக பீகாரில் ஷகாஸ்ரா ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட ரேகாவின் மருத்துவ அறிக்கை தொடர்பான ஆவணங்கள் மாறிவிட்டதே தவறான சிகிச்சைக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஆனாலும் வயிற்று வலிக்காக வந்த பெண்ணுக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.