டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையர் சோமானி தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்த பிறகு செய்தியாளர்களுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஆணையர் சோமானி பேட்டி அளித்ததாவது:

இரண்டு தடுப்பூசிகளும் 2 முதல் 8 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்க முடியும். அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானவை.

பாதுகாப்பில் சிறிதளவு குறைபாடு இருந்தாலும் நாங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்க மாட்டோம். தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை. லேசான காய்ச்சல், உடல் வலி, ஒவ்வாமை போன்றவை எந்த ஒரு தடுப்பூசிகளுக்கும் பொதுவானவைதான் என்றார்.