காமன்வெல்த் 2018 : பாட்மிண்டனில் சாய்னாவுக்கு தங்கம்

கோல்ட் கோஸ்ட்

ஸ்திரேலியாவில் காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர்  பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி வி சிந்து இருவரும் மோதினார்கள்.

இந்த போட்டியில் சாய்னா நேவால் 21-18, 23-21 என்னும் நேர் செட்டில் வெற்றி பெற்ற தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

தோல்வி அடைந்த சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட்டது.

காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டிகளில் பதக்க வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

மொத்தம் 26 தங்கம், 19  வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என 65 பதக்கங்கள் வென்றுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: India's saina wins gold and sindhu silver in badminton singles
-=-