சென்னை

கில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள டைகர் என்னும் மோப்ப நாய் குற்றங்களை தடுக்கு முதுமலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு பல வழக்குகளில் மோப்ப நாய்கள் மிகவும் உதவி அளிக்கின்றன.  இவற்றுக்கு காவல்துறையினர் சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர்.  அவ்வகையில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ள மோப்ப நாயாக டைகர் என்னும் நாய் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நாய் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்ததாகும்.   இந்த நாய்க்கு சுமார் ஒன்றரை வயதாகிறது.   இந்த நாய் ஹரியானா மாநிலத்டில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்ற டைகர்  பயிற்சியின் முடிவில் இந்தியாவின் நம்பர் 1 மோப்ப நாய் என புகழ் பெற்ருள்ளது.

தற்போது முதுமலை வனப்பகுதியில் வனம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளன.  அந்த குற்றைங்களை செய்வோரைக் கண்டறிய காவல்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.  அவரக்ளுக்கு உதவ டைகர் மோப்ப நாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.