டெல்லி: இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உள்துறைஅமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியே இருக்க வேண்டும் என்றும், இந்திதான் நாடாளுமன்றத்தின் அலுவல் மொழி என்றும், பல வட மாநிலங்களில் இந்தி மொழியை ஆட்சியாக மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனவே ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியா, நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்தி உள்ளூர் மொழிகளுக்கு மாற்று அல்ல என்று விளக்கினார்.
மேலும், அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று வலியுறுத்தியவர், மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். நாட்டின் குடிமக்கள் பேசும் மொழி ஒரே மொழியாக இருக்கும்போது அது இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும் என கூறியவர், வெவ்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள், தொடர்பு வழியாக இந்தியாவின் மொழியாக இந்தி இருக்க வேண்டும் எனவும் அமித்ஷா குறிப்பிட்டார்.
அமித்ஷாவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டிற்கு பலவீனம் அல்ல என பலமொழிகளைக் கொண்டு டிவிட் பதிவிட்டுள் ளார். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இதுபோல இந்தி திணிப்பு குறித்து அமித்ஷா பேசும்போது, இது சர்ச்சையான நிலையில், அப்போதே ராகுல்காந்தி, அமித்ஷாவின் பேச்சை கண்டித்ததுடன், இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது பலவீனம் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு