வயநாடு, கேரளா
இந்தியாவின் மிகப் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
கேரள அரசு மின் வாரியம் வயநாடு பகுதியில் உள்ள பனசுரா சாகர் அணையில் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது இந்த அணையின் நீரில் சூரிய ஒளி மின் தகடுகள் மிதக்க விடப்பட்டுள்ளன. அந்த தகடுகளில் விழும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுக்கப்படும்.
இந்த மின் உற்பத்தி நிலையம் 500 கிலோ வாட் திறன் உடையது ஆகும். இதில் 1938 சூரிய ஒளித் தகடுகள், ஒரு 500 கிலோ வாட் டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் 17 இன்வர்ட்டர்கள் உள்ளன. இவ்வாறு நீர்நிலைகளில் சூரிய தகடுகள் மிதக்க விடப்பட்டு மின் உற்பத்தி தயாரிக்கும் நிலையங்களில் இதுவே இந்தியாவின் மிகப் பெரியதாகும்.