பெங்களூரு: ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப், மூன்றாவது கிராண்ட் பிரிக்ஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திரங்கள் ஹம்பி, ஹரிகா தோல்வியைத் தழுவினர்.
பெண்களுக்கான ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 21 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இப்போட்டி, மொத்தம் 4 கிராண்ட் பிரிக்ஸ் பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும், 16 பேர் நாக்-அவுட் முறையில் மோதுவர்.
இத்தொடரின், மூன்றாவது கிராண்ட் பிரிக்ஸ் பிரிவின் காலிறுதியில், இந்தியாவின் கொனேரு ஹம்பி, ரஷ்ய வீராங்கனையிடம் 2-9 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றார்.
மற்றொரு போட்டியில், இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி, சீன வீராங்கனையிடம் 3-7 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றுப்போனார்.