சண்டிகர்:

ஞ்சாப் மாநிலம் லூதியான  காவல்  நிலைய உதவிஆணையர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுதான் நாட்டிலேயே  காவல்துறையில் முதல்பலி என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ள நிலையில் டெல்லி இரண்டாம் இடத்திலும்,மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம்  லூதியானா மாவட்டத்தில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த அனில் கோலி (வயது 52) சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள  எஸ்பிஎஸ் அப்போலோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு   பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பலியானவர் போலீஸ் அதிகாரி என்பதால் காவலர்கள் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே கொரோனாவுக்கு பலியான  காவல்துறையைச் சேர்ந்த முதல்நபர்  அனில் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.